ஈரோட்டில்விஜய் மக்கள் இயக்கத்தினர் அன்னதானம்
ஈரோட்டில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அன்னதானம் செய்தனா்
உலக பட்டினி தினத்தையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் அன்னதானம் வழங்க வேண்டும் என நடிகர் விஜய் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி ஈரோடு நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் காவேரி ரோடு பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இயக்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் எம்.பாலாஜி தலைமை தாங்கினார். செயலாளர் கே.பி.எஸ்.சீனிவாசன், ஈரோடு நகர தலைவர் காவலன் கார்த்தி, நற்பணி மன்ற தலைவர் யூத் விஜய், வினோத்குமார், ஆட்டோ பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி 300 ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த அருண், ஸ்ரீதர், மவுலி, சந்துரு, பார்த்தீபன், லோகேஷ், குமார், சவுந்தர்ராஜ், பாலாஜி, கமலஹரி, சுரேஷ் புகழ் ஆகியோர் கலந்து கொண்டனர்.