எட்டயபுரத்தில்மினி மராத்தான் போட்டி
எட்டயபுரத்தில் மினி மராத்தான் போட்டி நடந்தது.
எட்டயபுரம்:
கீழ ஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக மினி மாரத்தான் போட்டி எட்டயபுரத்தில் பாரதி மில் அருகே நடந்தது. போட்டியை எட்டயபுரம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் முத்து விஜயன், கல்லூரி செயலர் அருட்தந்தை விக்டர் அந்தோணி ராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்ப போட்டியானது ஆண்களுக்கு 6 கிலோமீட்டர் தூரம், பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரம் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டன. ஆண்களுக்கான பிரிவில் முதல் பரிசை ஸ்ரீவைகுண்டம் சக்திவேல், இரண்டாம் பரிசை மதுரை கோகுல், மூன்றாம் பரிசை விளாத்திகுளத்தை சேர்ந்த வெங்கடேஷ் ஆகியோர் பெற்றனர். பெண்களுக்கான பிரிவில் முதல் பரிசை புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி கோகிலா இரண்டாம் பரிசை செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி ரம்யா, மூன்றாம் பரிசை புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி சங்கீதா ஆகியோர் பெற்றனர். போட்டி ஏற்பாடுகளை அருட்தந்தையர்கள் அந்தோணிசாமி அலெக்ஸ் மற்றும் பேராசிரியர்கள் திருச்செல்வமணி, பிரபு, மோகன் ரூபஸ், இனிகோ அலெக்ஸ், ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.