ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில்கிறிஸ்மஸ் விழா


ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில்கிறிஸ்மஸ் விழா
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

ஏரல்:

மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்மஸ் விழா நடந்தது. அருட்திரு இஸ்ரேல் ராஜதுரைசிங் கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்கினார். சிறப்பு விருந்தினராக பிலாய் இந்தியன் இண்டஸ்ட்ரீஸ் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் ஜோஸ் இம்மானுவேல் சிறப்புரையாற்றினார். விழாவில் மாணவ-மாணவிகள் கிறிஸ்மஸ் பிறப்பு பாடல் பாடினார்.கல்லூரி பேராசிரியர் மற்றும் அலுவலர்கள் கிறிஸ்மஸ் பாடல்கள் பாடினார்.கல்லூரியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உணர்த்தும் கிறிஸ்துமஸ் குடிலும் அமைக்கப்பட்டிருந்தது. கல்லூரி சார்பாக ஏழைகளுக்கு புத்தாடைகள், பரிசு பொருட்கள், இனிப்புகள் மற்றும் உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிறுவனர் பிரகாஷ் ராஜ்குமார், கல்லூரி தாளாளர் ராஜரத்தினம், பிரியா பிரகாஷ்ராஜ்குமார், அடைக்கலாபுரம் தங்கராஜ், சகாயம், முடிவைத்தானந்தல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டி எப்சிபா மற்றும் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story