ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஜோலார்பேட்டை வழியாக சென்னை, பெங்களூரு, கோவை, திருவனந்தபுரம உள்பட வடமாநிலங்களுக்கு அதிக அளவில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரெயில் நிலையங்களிலும் ரெயிலின் பயணத்தின் போதும் சமூக விரோதிகளால் குழந்தைகள் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே பயணிகள் விழிப்புணர்வுடன் இருக்க ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குறித்து போலீசாருக்கு 1512 என்ற எண் மூலம் தகவல் தெரிவிக்க போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குழந்தை கடத்தல், காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிதலுக்கு 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story