கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கார்த்திகை சோமவார பால்குட ஊர்வலம்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கார்த்திகை சோமவார பால்குட ஊர்வலம் நடந்தது.
கழுகுமலை:
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கார்த்திகை சோமவாரத்தன்று வர்த்தக சங்கம் சார்பில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 10.30 மணியளவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். முன்னதாக இந்த ஊர்வலத்தை தொழிலதிபர் பழனி தொடங்கி வைத்தார். கீழ் பஜாரில் இருந்து தொடங்கிய ஊர்வலமானது தெற்கு ரத வீதி, காவல் நிலைய சாலை, பஸ் ஸ்டாண்ட் ரோடு மற்றும் கிரிவல பாதை வழியாக மலையை சுற்றி சென்று கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. கழுகுமலை சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், நீலகண்டன், அ.தி.மு.க. நகர செயலாளர் முத்துராஜ், நகர இளைஞர் அணி செயலாளர் கருப்பசாமி, உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கழுகுமலை ஈஸ்ட் இந்தியா மேச் கோபாலகிருஷ்ணன் குடும்பத்தினர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.