காமநாயக்கன்பட்டியில்புதிதாக 3 மின் மாற்றிகள் இயக்கி வைப்பு


காமநாயக்கன்பட்டியில்புதிதாக 3 மின் மாற்றிகள் இயக்கி வைப்பு
x
தினத்தந்தி 1 Aug 2023 12:15 AM IST (Updated: 1 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காமநாயக்கன்பட்டியில் புதிதாக 3 மின் மாற்றிகள் இயக்கி வைக்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ரூ. 12.8 லட்சம் மதிப்பீட்டில் 25 கிலோ வாட் மின் திறன் கொண்ட 3 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றிகளை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பங்கேற்று 3 மின்மாற்றிகளை இயக்கி, மின் விநியோகத்தை தொடங்கி வைத்தார்,

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், கோவில்பட்டி கோட்ட செயற்பொறியாளர் காளிமுத்து, உதவி செயற்பொறியாளர்கள் குருசாமி, மிகாவேல், முனியசாமி, தங்கராஜ், முருகேசன், காமநாயக்கன்பட்டி பங்குத்தந்தை அந்தோணி அ. குருஸ் அடிகளார், பஞ்சாயத்து தலைவி கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, மாவட்ட பிரதிநிதி அருளானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story