கட்டாரிமங்கலம் அழகியகூத்தர் கோவிலில் திருக்கல்யாணம் வைபவம்
கட்டாரிமங்கலம் அழகியகூத்தர் கோவிலில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி மற்றும் வள்ளி, தெய்வானை அம்பாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணி முதல் சுப்பிரமணிய சுவாமி மற்றும் தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் சாத்தான்குளம் தச்சமொழி முத்துமாரியம்மன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 7-ம் நாள் முருகப்பெருமான் மற்றும் தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் திருக்கல்யாணத்துக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர்.
Related Tags :
Next Story