கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ.49¼ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்


கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ.49¼ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்
x

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.49¼ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது.

ஈரோடு

கவந்தப்பாடி

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 3 ஆயிரத்து 761 மூட்டைகளில் நாட்டுச்சர்க்கரையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் 60 கிலோ மூட்டை திடம் ரக நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 450-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 480-க்கும், மீடியம் ரக நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 300-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 350-க்கும் விற்பனை ஆனது. நாட்டு சர்க்கரை மொத்தம் ரூ.49 லட்சத்து 28 ஆயிரத்து 240-க்கு ஏலம் போனது.

இதேபோல் உருண்டை வெல்லம் 30 கிலோ சிப்பம் பொங்கல் மற்றும் பிரசாதம் தயாரிப்பதற்காக முதல் தரம் ஒரே விலையாக 1,440 ரூபாய் என மொத்தம் 28 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் சேர்த்து மொத்தமாக 49 லட்சத்து 57 ஆயிரத்து 40 ரூபாய்க்கு பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்ததாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


Next Story