கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில்குட்டை பனைமரங்களை உருவாக்க ஆய்வு
கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் குட்டை பனைமரங்களை உருவாக்க ஆய்வு நடந்து வருகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தோட்டக்கலைத்துறை இணை பேராசிரியர் ம.இ.மணிவண்னன், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி சார்பில் பனை மரம் குறித்து நடைபெறும் ஆராய்ச்சிகள் குறித்து விளக்கி கூறினார்.
அப்போது, குட்டை பனைமரங்களை உருவாக்குவதற்காக நடைபெறும் ஆய்வுகள் மற்றும் பனையேறும் கருவியை உருவாக்குவதற்கான ஆய்வுகளின் தற்போதைய நிலையை விளக்கினார். மேலும், பதனீரை 15 முதல் 20 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கான நுண்ணுயிர் வடிகட்டும் கருவி, பனம்பழ கூழ் தயாரிக்கும் செய்முறை, கருப்பட்டி தயாரிக்கும் எந்திரம், பனைத்தேன் தயாரிக்கும் எந்திரம் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
Related Tags :
Next Story