கொங்கராயப்பாளையத்தில் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை


கொங்கராயப்பாளையத்தில் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை
x

கொங்கராயப்பாளையத்தில் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே கொங்கராயப்பாளையம் ஊராட்சியில் கள்ளக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பாக பேரிடர் கால பாதுகாப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மணிமுக்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் கலந்து கொண்டு ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களாகிய பிளாஸ்டிக் குடம், காலியான வாட்டர் பாட்டில், வாட்டர் கேன், லாரி டியூப், பி.வி.சி. பைப் ஆகிய பொருட்களை கொண்டு பருவ மழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பேரிடர் காலங்களில் எவ்வாறு தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டு மற்றவர்களை காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து ஒத்திகை செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, தாசில்தார் விஜய பிரபாகரன், வருவாய் ஆய்வாளர் பாலு, வடபூண்டி ஊராட்சி மன்ற தலைவர் கொடியரசி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story