கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுநிகழ்ச்சி


கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில்  தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுநிகழ்ச்சி
x

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுநிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட மன நல திட்டத்தின் கீழ் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கமலவாசன், நிலைய மருத்துவர் பூவேஸ்வரி ஆலோசனையின் பேரில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் தலைமை தாங்கனார். ஆக்டிவ் மைண்ட் ஸ் தொண்டு நிறுவன தலைவர் தேன் ராஜா முன்னிலை வகித்தார். மனநல சமூக பணியாளர் பெரியசாமி மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் விதமாக செயல்முறை விளக்கம் அளித்தார். மாவட்ட மன நல திட்ட மருத்துவர் நிரஞ்சனா தேவி மாணவ- மாணவிகளுடன் கலந்து உரையாடினார். அனைவரும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், மனநல காப்பக மேற்பார்வையாளர்கள் மாடசாமி, ராம் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story