கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில்மொபைல் அறிவியல் கண்காட்சி


கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில்மொபைல் அறிவியல் கண்காட்சி
x
தினத்தந்தி 20 Oct 2023 12:15 AM IST (Updated: 20 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் மொபைல் அறிவியல் கண்காட்சி நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் மொபைல் அறிவியல் கண்காட்சி பள்ளி தலைமை ஆசிரியர் பிரபு தலைமையில் நடைபெற்றது. கோவில்பட்டி பகுதியிலுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நெல்லை தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் இந்த கண்காட்சி நடைபெற்றது. பஸ்சில் வடிவமைக்கப்பட்டு இருந்த இந்த அறிவியல் கண்காட்சியை கோவில்பட்டி பகுதியிலுள்ள பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் பார்த்து பயனடைந்தனர்.


Next Story