கோவில்பட்டியில், சனிக்கிழமைமாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்:கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


கோவில்பட்டியில், சனிக்கிழமைமாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்:கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில், சனிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

கோவில்பட்டியில் இன்று(சனிக்கிழமை) மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சிறப்பு முகாம்

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய 3 கோட்டங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது 2-வது கட்டமாக கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று (சனிக்கிழமை) கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.

இந்த முகாமில் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள் கலந்து கொண்டு அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம். தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள் முகாமில் பதிவு செய்யலாம்.

முதல்-அமைச்சர் காப்பீடு அட்டை

இதுவரை முதல்-அமைச்சர் காப்பீட்டு அட்டை பெறாதவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு காப்பீடு அட்டை பெறலாம். முகாமில் ஆதார் முகாம் மற்றும் பொது மருத்துவ சேவையும் அளிக்கப்பட உள்ளது. 90 சதவீதத்துக்கும் அதிக பாதிப்பு உடைய கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், மூளை, முடக்குவாதம் மற்றும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கூடுதல் பராமரிப்பு உதவித் தொகை வேண்டுபவர்கள் முகாமில் நடைபெறும் மருத்துவக்குழு தேர்வில் கலந்து கொள்ளலாம். எனவே கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story