குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ரூ.1 கோடியில் முன்மண்டபம் கட்டிடப்பணி தொடக்கம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ரூ.1 கோடியில் முன்மண்டபம் கட்டிடப்பணி தொடங்கியது.
தூத்துக்குடி
குலசேகரன் பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தண்டுபத்து நா.சண்முகப் பெருமாள் நாடார் -பிச்சமணி அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடியில் முன்மண்டபம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த ஜூன் மாதம் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடந்தது. தசரா திருவிழாவை முன்னிட்டு அந்த மண்டப கட்டிடப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. நேற்று அந்த கட்டிட பணி தொடக்க நிகழ்ச்சியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கட்டிடம் கட்டுமான பணி தொடங்கியது. இதில் தண்டுபத்துதொழில் அதிபர் ராமசாமிநாடார், கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story