கூடலூர் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறு: பொதுமக்கள் அவதி


கூடலூர் மெயின் பஜாரில்  ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறு:  பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

தேனி

கூடலூர் மெயின்பஜாரில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த சாலையை பலர் ஆக்கிரமித்து பெயர் பலகை, இரு சக்கர வாகனங்களை நிறுத்தி உள்ளனர். மேலும் சரக்கு வாகனங்களை நிறுத்தி ஏற்றி, இறக்கி வருகின்றனர். இதனால் இந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. கூடலூர் நகரின் முக்கிய சாலையாக மெயின்பஜார் விளங்குவதால் சாலையில் போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளினால் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. வாகனங்களில் செல்வோரும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே கூடலூர் நகராட்சி நிர்வாகம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Related Tags :
Next Story