மந்தித்தோப்பு பூமாதேவி கோவிலில்காட்சி திருவிழா பால்குட ஊர்வலம்


மந்தித்தோப்பு பூமாதேவி கோவிலில்காட்சி திருவிழா பால்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மந்தித்தோப்பு பூமாதேவி கோவிலில் காட்சி திருவிழா பால்குட ஊர்வலம்

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள பூமாதேவி கோவில் சித்தர் பீடத்தில் தை மாத காட்சி திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. காலை 5 மணிக்கு கணபதி பூஜை, சங்கல்பம், கும்பபூஜை, அம்பாள் மூலமந்திர ஜெபம், ஹோமம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு அம்பாள், குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

காலை 9.30 மணிக்கு 3 திருவிளக்கு வைத்து புஷ்பாஞ்சலியும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு செண்பகவல்லி அம்மன் கோவிலில் இருந்து பால்குடம் ஊர் வலம், கற்பூரஜோதியுடன் குருநாதர், அம்மா பூமாதேவி திருவீதி உலா நடந்தது. இரவு 10 மணிக்கு அன்னதான பூஜையும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.


Next Story