மீனாட்சி அம்மன், ராமேசுவரம் கோவில்களில்அமித்ஷாவின் மனைவி-மகன் சாமி தரிசனம்


மீனாட்சி அம்மன், ராமேசுவரம் கோவில்களில்அமித்ஷாவின் மனைவி-மகன் சாமி தரிசனம்
x

மீனாட்சி அம்மன், ராமேசுவரம் கோவில்களில் அமித்ஷாவின் மனைவி-மகன் சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை


மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மனைவி சோனல் ஷா மற்றும் இவர்களுடைய மகனும், இந்திய கிரிக்கெட் சங்க செயலாளருமான ஜெய்ஷா மற்றும் குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் மதுரை வந்தனர்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து தரிசித்தனர். அவர்களை கோவில் பட்டர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். அவர்களுக்கு கோவில் சார்பில் குங்குமம், விபூதி, லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதே போல் அமித்ஷாவின் மனைவி சோனல் ஷா, மகன் ஜெய்ஷா ஆகியோர் நேற்று ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றும் சாமி தரிசனம் செய்தனர்.


Next Story