மீனாட்சி அம்மன் கோவிலில்ரூ.1 கோடியே 43 லட்சம் உண்டியல் காணிக்கை
மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.1 கோடியே 43 லட்சம் உண்டியல் காணிக்கை
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உபகோவில்களில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் மாதம் ஒரு முறை திறந்து எண்ணப்படும். அதன்படி நேற்று அனைத்து கோவில்களில் உண்டியல்கள் திறந்து மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.
அதில் 1 கோடியே 43 லட்சத்து 93 ஆயிரத்து 392 ரூபாயும், 648 கிராம் தங்கமும், 1 கிலோ 298 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக கிடைக்க பெற்றன. கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள், பக்தர்கள் பேரவை அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர். மேலும் உண்டியல் எண்ணும் பணியை கோவில் நிர்வாகம் சார்பில் இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
Related Tags :
Next Story