முடுக்கலாங்குளத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
முடுக்கலாங்குளத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
தூத்துக்குடி
கயத்தாறு:
முடுக்கலாங்குளம் கிராமத்தில் தமிழக அரசின் இலவச கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடை இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் மாடுகளுக்கு தடுப்பூசிகள் போட்டு தொடங்கி வைத்தார். இதில் கோவில்பட்டி கால்நடை உதவிஇயக்குனர் விஜய்ஸ்ரீ, மருத்துவர் மனோஜ் குமார் மற்றும் கால்நடை அலுவலர்கள் 340 பசு மாடுகளுக்கும், 160 எருமை மாடுகளுக்கும், 450 வெள்ளாடுகளுக்கும், 700-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளுக்கும், பத்து நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தினர். குடற்புழு நீக்குதல் உள்பட பல்வேறு மாத்திரைகளும் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story