சில்லாங்குளம் முத்துகருப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


சில்லாங்குளம் முத்துகருப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சில்லாங்குளம் முத்துகருப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடராம்:

ஓட்டப்பிடராம் அருகே சில்லாங்குளம் முத்துகருப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் 9, 10-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், அரசு பள்ளிகளில் கல்வி பயின்றவர்களும் சமுதாயத்தில் உயரிய பதவியில் உள்ளனர். எந்த சூழ்நிலையிலும் கல்வி பயின்று சமுதாயத்தில் சாதனையாளர்களாக வரவேண்டும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து, நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துகொண்டு இலக்கை நோக்கி பயணித்தால் வாழ்வில் நல்ல நிலையை அடைய முடியும். எந்தெவொரு சூழ்நிலையையும் தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் அணுக வேண்டும், என்றார். மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்கான பயிற்சி குறித்து தூத்துக்குடி மன நல மருத்துவர் சிவசைலம், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி செலின்ஜார்ஜ் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன், பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், முத்துக்கருப்பன் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் பாலமுருகன், சில்லாங்குளம் பஞ்சாயத்து தலைவர் சரோஜா, சில்லாங்குளம் முத்துகருப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளி நிர்வாக மேற்பார்வையாளர் விமலா பாலமுருகன் உட்பட பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story