முத்துக்கவுண்டன்பாளையத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
நெல் கொள்முதல் நிலையம்
சிவகிரி அருகே உள்ள அஞ்சூர் ஊராட்சிக்கு உள்பட்ட முத்துக்கவுண்டன்பாளையத்தில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சுற்றுச்சூழல் அணி கொடுமுடி மேற்கு ஒன்றிய தி.மு.க. அமைப்பாளர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் விவேகானந்தன், வர்த்தக அணி மேற்கு ஒன்றிய துணை அமைப்பாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சூர் ஊராட்சி தலைவர் பிரகாஷ் வரவேற்று பேசினார். கொடுமுடி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நடராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதில் கட்சியின் கொடுமுடி மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் சிவாசலபதி, தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எழுத்தர் சீனிவாசன் நன்றி கூறினார்.