நாடார்கொலுவைநல்லூரில் ரூ.12 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம் திறப்பு


தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாடார்கொலுவைநல்லூரில் ரூ.12 லட்சத்தில் உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி

மேலஆத்தூர்:

நாடார்கொலுவைநல்லூரில் ரூ.12 லட்சத்தில் உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

உடற்பயிற்சி கூடம்

மேலஆத்தூர் ஊராட்சி நாடார்கொலுவைநல்லூரில் பெருந்தலைவர் காமராஜர் ஐக்கிய இளைஞர் சங்கத்திற்கு திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் செலவில் உடற் பயிற்சி கூடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உமரி சங்கர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு உடற்பயிற்சி கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அங்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த தின விழாவை முன்னிட்டு ஆழ்வார்திருநகரி கிழக்கு தி.மு.க. ஒன்றியம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளரும் மேலஆத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவருமான பி.சதீஷ்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஒதொழிலாளிக்கு மூன்று சக்கர வாகனம், பள்ளி குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்கள், தட்டு மற்றும் பாத்திரங்கள், சிகிச்சைக்கான மருத்துவ உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முக்காணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.எஸ். உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், ஆத்தூர் நகர செயலாளர் எம்.பி.முருகானந்தம், ஆழ்வார்திருநகரி யூனியன் குழுஉறுப்பினர் மாரிமுத்து, கிராம பஞ்சாயத்து துணை தலைவர் பக்கீர் முகைதீன், ஆத்தூர் சுற்றுவட்டார நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ. கே.செல்வராஜ் நாடார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பயணியர் நிழற்குடை

இதேபோன்று, குரும்பூர் அருகே உள்ள சேதுக்குவாய்த்தானில் புதிய பயணியர் நிழற்குடை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5½ லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, ஆழ்வார்திருநகரி பஞ்சாயத்து யூனியன் தலைவர் ஜனகர், ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், பஞ்சாயத்து தலைவர் சுதா, மாவட்டத் துணைத் தலைவர் ஜெயக்குமார் ரூபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அங்கன்வாடி மையம்

மேலும், உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-16 புதுமனை மேலத்தெரு, வார்டு எண்-11 வைத்திலிங்கபுரம், வார்டு எண்-8 மாரியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் அமைந்துள்ள 3 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன.

இந்த 3 கட்டிடங்களையும் புதுப்பித்து கட்ட வேண்டும் என்று உடன்குடி பேரூராட்சி மன்ற தலைவர் ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசியின் கோரிக்கை மனுவை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ முன்னிலையில், உடன்குடி கூட்டுறவு சங்க தலைவரும், கவுன்சிலருமான அஸ்ஸாப் கல்லாசி, மாவட்டபிரதிநிதி ஜெயபிரகாஷ், 16-வது வார்டு செயலாளர் சுபியான் ஆகியோர் தண்டுபத்தில் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனை சந்தித்து கொடுத்து, கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினர். இம்மனுவைபெற்றுக் கொண்ட அமைச்சர், விரைவில் இந்த 3 அங்கன்வாடி மையங்களுக்கும் புதிய கட்டிடம் கட்டப்படும் என உறுதி அளித்தார்.


Next Story