நல்லமங்காபாளையத்தில்பொல்லான் நினைவு நாள் அனுசரிப்புஅரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி


நல்லமங்காபாளையத்தில்பொல்லான் நினைவு நாள் அனுசரிப்புஅரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி
x

நல்லமங்காபாளையத்தில் பொல்லான் நினைவு நாளையொட்டி அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்

ஈரோடு

நல்லமங்காபாளையத்தில் பொல்லான் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு பொல்லான் உருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நினைவு நாள் அனுசரிப்பு

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 218-ம் ஆண்டு நினைவு நாள், அரசு விழாவாக மொடக்குறிச்சி சமுதாய கூடத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு பொல்லான் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி, பொல்லான் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதில் மாவட்ட செயலாளர் மயில்துரையன், சென்னிமலை ஒன்றிய தலைவர் அப்பார் ரங்கசாமி, ஈரோடு மாநகர இளைஞர் அணி செயலாளர் சிவா பாண்டியன், பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், தலைவர் மருதமுத்து, பள்ளிபாளையம் ஒன்றிய இளைஞர் அணி தலைவர் மதுரைமுத்து, ஈரோடு மாநகர நிர்வாகி ரஞ்சித், ஜான் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

நல்லமங்காபாளையத்தில்...

இதேபோல் மாவீரன் பொல்லான் சுட்டுக்கொல்லப்பட்ட இடமான அறச்சலூர் அருகே உள்ள நல்லமங்காபாளையத்தில் பொல்லான் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சமூக நீதி மக்கள் கட்சி மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை நிறுவன தலைவர் வடிவேல் ராமன் தலைமையில் பொல்லான் வாரிசுதாரர்கள், ஊர் பொது மக்கள் பொல்லான் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் கலந்து கொண்டு பொல்லான் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில பொதுச்செயலாளர் இளவேனில், மாவட்ட செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், வேங்கை பொன்னுச்சாமி, வெள்ளியங்கிரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாலை அணிவித்து அஞ்சலி

தலித் விடுதலை கட்சி சார்பில் இணை பொதுச்செயலாளர் சகுந்தலா, தங்கராஜ், மாநில அமைப்பாளர் ஆறுமுகம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பொல்லான் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

சமூக விடுதலை கட்சி தலைவர் ஆறுமுகம், தலித் விடுதலை இயக்க பொதுச்செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட தலைவர் பொன்சுந்தரம், சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி தலைவர் தங்கராஜ், நாடார் மகாஜன சங்க தலைவர் பொன்விசுவநாதன், மாவீரன் பொல்லான் பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், மாநில நிர்வாகிகள் ஆறுமுகம், சதீஷ்பாபு, கண்ணய்யன், மணிகண்டன் உள்பட பல்வேறு கட்சியினர், அமைப்பினர் பொல்லான் உருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.


Next Story