நாசரேத் கதீட்ரலில்உதவி குருவானவர்களுக்கான அபிஷேக ஆராதனை


நாசரேத் கதீட்ரலில்உதவி குருவானவர்களுக்கான அபிஷேக ஆராதனை
x
தினத்தந்தி 1 Sept 2023 12:15 AM IST (Updated: 1 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாசரேத் கதீட்ரலில் உதவி குருவானவர்களுக்கான அபிஷேக ஆராதனை நடந்தது.

தூத்துக்குடி

நாசரேத்:

சி.எஸ்.ஐ தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம் நாசரேத் கதீட்ரலில் 33 உதவி குருக்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பிரதம பேராயரின் ஆணையாளரான பேராயர் தீமோத்தேயு ரவீந்தர் தேவ செய்தி வழங்கி ஜெபித்து உதவி குருக்களுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தார். இதில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் உள்ள 30 பேர் உதவி குருவாகவும், 3 மகளிர் கவுரவ உதவி குருவாகவும் அபிஷேகம் செய்யப்பட்டனர். முன்னதாக கதீட்ரல் வளாகத்தில் பேராயருக்கு சேகர கமிட்டி மற்றும் சபை மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆராதனையில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல உப தலைவர் தமிழ்செல்வன், திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story