நாசரேத் கல்லூரியில்தூய்மை பணியாளர்களுக்குமரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி
நாசரேத் கல்லூரியில் தூய்மை பணியாளர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி
நாசரேத்:
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ஜவகர் சாமுவேல் தலைமை வகித்து தூய்மை பணியாளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். கல்லூரி நிதியாளர் சுரேஷ் ஆபிரகாம், கல்லூரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர் திலகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை பணியாளர்கள் கல்லூரியை சுற்றிலும் ரோட்டில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். ஏற்பாடுகளை கல்லூரி செயலர் பிரேம்குமார் ராஜாசிங் தலைமையில், கல்லூரி நாட்டுப் நலப்பணித்திட்ட அலுவலர்கள் சாந்தி சலோமி, சீயோன், செல்லரூத், பியூலா ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story