ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு திறப்பு
ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு திறப்பு விழாநடந்தது.
ஓட்டப்பிடாரம்:
ஒட்டநத்தம் அரசு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.25 லட்சம் செலவில் செவிலியர்கள் குடியிருப்பு, தருவைகுளம், மருதன்வாழ்வு ஆகிய கிராமங்களில் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் ஆக மொத்தம் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது. திருச்சியில் நேற்று நடைபெற்ற விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழாவில் எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ கலந்து கொண்டு புதிய செவிலியர் குடியிருப்பு கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
விழாவில் ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அன்புராஜ், ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் நியாஸ், சித்த மருத்துவர் ஸ்ரீதேவி, பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார், சரிதா, ஊரக வளர்ச்சித் துறை பயிற்றுநர் அதிசயமணி, சுகாதார ஆய்வாளர் காளிமுத்து உட்பட மருத்துவ ஊழியர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.