பத்மநாபமங்கலம் யூனியன் நடுநிலைப்பள்ளியில் ரூ.42 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி
பத்மநாபமங்கலம் யூனியன் நடுநிலைப்பள்ளியில் ரூ.42 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீவைகுண்டம்:
பத்மநாபமங்கலத்திலுள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 3 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படவுள்ளது.
இதற்கானஅடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, பத்மநாபமங்கலம் பஞ்சாயத்து தலைவர் சிவகாமி வைகுண்டபாண்டியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், அண்டோ, வட்டார கல்வி அலுவலர் பாலசுந்தரி, பஞ்சாயத்து துணைத்தலைவர் முத்துமதிபலவேசம், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் நல்லக்கண்ணு, புங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை கலையரசி வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய பள்ளிக்கூடம் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப்பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.