பரமன்குறிச்சி வட்டன்விளை கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
பரமன்குறிச்சி வட்டன்விளை கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
உடன்குடி:
உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி ஊராட்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி வருடாந்திர பெருங்கொடை விழா கடந்த 6-ந்தேதி தேதிகாலை 6 மணிக்கு கணபதி ஹோமம் யாகசாலைபூஜையுடன் தொடங்கியது. யாக சாலை பூஜையில் இருந்து புனித நீர் எடுத்துகோவில் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, வருஷாபிஷேகம் நடந்தது, பகல் 11 மணிக்கு சிறப்பு புஷ்பாஞ்சலியும், அலங்கார பூஜையும், நண்பகல் ஒரு மணிக்குஆலயத்திற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெற்றது.
நேற்று இரவு 7 மணிக்கு நாடு நலம் பெற வேண்டியும், நல்ல மழை பொழிந்து வறுமை நீங்கி செழுமை வேண்டி பாடல்கள் பாடியும், 108 திருவிளக்கு பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி நடந்தது. இன்று(ிசெவ்வாய்கிழமை) காலை 8 மணிக்கு 108 பால்குட ஊர்வலம், வில்லிசை, நன்பகல் ஒரு மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் தெருவீதி வருதல், இரவு 8 மணிக்கு சுமங்கலிபூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார பூஜை, சந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி வருதல், நாளை(புதன்கிழமை) பகல் 12 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவு7 மணிக்கு கரகாட்டம், 10 மணிக்கு மாவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் பூஞ் சப்பரத்தில் பவனி, நாளைமறுநாள்(வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெறுகிறது. இதற்கானற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர்மக்கள் சிறப்பாக செய்துள்ளனர்.