பெரியகுளம், சின்னமனூரில்கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு


பெரியகுளம், சின்னமனூரில்கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 5:43 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம், சின்னமனூரில் உள்ள கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தேனி

தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மனுஜ் ஷியாம் சங்கர் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் விஜயராகவன், செந்தில்குமார் ஆகியோர் பெரியகுளம், சின்னமனூர் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். சட்டமுறை எடையளவு சட்டம், பொட்டல பொருட்கள் விதிகள் ஆகியவை முறையாக பின்பற்றப்படுகிறதா? விதிமீறல் உள்ளதா? என்பது குறித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், முத்திரையிடப்படாத 4 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் சின்னமனூரில் பொட்டல பொருட்கள் விதிகளை பின்பற்றாத 2 கடைகளில் பொட்டல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் கூறும்போது, 'விதிகளை பின்பற்றாத கடைகளின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தராசுகள் உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடப்பட வேண்டும். அவ்வாறு முத்திரையிடாத தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். பொட்டல பொருட்களின் விதிகளை பின்பற்றாதவர்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


Related Tags :
Next Story