அஞ்சலகங்களில் வெள்ளிக்கிழமை முதல் 16-ந் தேதிவரை ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளலாம்


அஞ்சலகங்களில் வெள்ளிக்கிழமை முதல் 16-ந் தேதிவரை  ஆதார் அட்டையில்  திருத்தம் மேற்கொள்ளலாம்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டிகோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் வெள்ளிக்கிழமை முதல் 16-ந் தேதிவரை ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்ட கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய- மாநில அரசுகள் பல்வேறு சேவைகள் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம், திருத்தம் போன்றவற்றை சிரமமின்றி மேற்கொள்ள கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 29 துணை அஞ்சலகங்களிலும் உள்ள ஆதார் சேவை மையங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 16-ந் தேதி செயல்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Next Story