தபால் நிலையங்களில்குறைந்த பிரிமீயத்தில் விபத்து காப்பீடு திட்டம்


தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தபால் நிலையங்களில் குறைந்த பிரிமீயத்தில் விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுவதாக கோவில்பட்டிதபால் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

தபால் நிலையங்களில் குறைந்த பிரிமீயத்தில் விபத்து காப்பீடு திட்டம் ெசயல்படுத்தப் படுவதாக கோவில்பட்டி கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விபத்து காப்பீடு

காப்பீடு திட்ட பலன் சாமானிய மக்களையும் சென்றடையும் படி இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் மிகக் குறைந்த பிரிமீய தொகையில் விபத்து காப்பீடு செயல் படுத்தப்படுகிறது. அதற்கான வயது 18 முதல் 65-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் உள்ளிட்ட எவ்வித காகித பயன்பாடின்றி, வீடு தேடி தபால்காரர் கொண்டு வரும், ஸ்மார்ட் போன், விரல்ரேகை பதிவு மூலம், 5 நிமிடத்தில் டிஜிட்டல் முறையில், பாலிசி திட்டத்தில் இணையலாம்.

விபத்தில் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் போன்ற பாதிப்புக்கு ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம். விபத்தில் உன் நோயாளி செலவுக்கு அதிகபட்சம் ரூ 60 ஆயிரம், புற நோயாளி செலவுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம், விபத்தில் பாதிக்கப்பட்டவரின் 2 குழந்தைகள் கல்விச் செலவுக்கு ரூ.1 லட்சம், மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினப்படியாக தலா ரூ. ஆயிரம் வீதம் 9 நாட்களுக்கு கிடைக்கும்.

குடும்பத்தினருக்கு...

விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயணச் செலவுக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம், ஈமக்காரியம் செய்ய ரூ.5 ஆயிரமும் கிடைக்கும். இத்தகைய பலன்களைத் பெற ஆண்டுக்கு ரூ.399 அல்லது ரூ.396 பிரிமீயம் செலுத்தினால் போதும். விபத்து காப்பீடு பாலிசி எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நடக்கும் விபத்தால் பாதிப்பு, உயிரிழப்பு போன்ற சம்பவம் மூலம், குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்பதால், அருகில் உள்ள தபால் அலுவலகங்களை அணுகி இந்த காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள தபால்நிலையம் அல்லது இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியை 04632- 210488 அல்லது 9840596804 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story