புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்;நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நகராட்சி கூட்டம்
புஞ்சை புளியம்பட்டி நகராட்சி சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் தி.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். ஆணையாளர் செயது உசேன், துணைத்தலைவர் பி.ஏ.சிதம்பரம், பொறியாளர் கவிதாஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
புறக்காவல் நிலையம்
பி.ஏ.சிதம்பரம் (துணைத்தலைவர்):- பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பஸ் நிலையம் உரிமம் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையாளர்:- விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பூர்ண ராமச்சந்திரன் (தி.மு.க.):- பஸ் நிலையத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. இதனை தடுக்க பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். இதற்காக நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் இடம் ஒதுக்கி தர வேண்டும்.
ஆணையாளர்:- உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
சிவ சண்முகம் (தி.மு.க.):- வார்டுகளில் தெருவிளக்கு அமைக்கப்படவேண்டும்.
பொறியாளர்:- புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு 247 தெருவிளக்குகள் பொருத்தப்பட உள்ளன. விரைவில் அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் அமைக்கப்படும். கூட்டத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் நம்பியூர் ரோட்டில் உள்ள குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை பயோ மைனிங் (உயிர் சுரங்கம்) முறையில் அகற்றுதல், அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு குடிநீர் கட்டணத்தில் விலக்கு அளித்தல் உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.