புதியம்புத்தூரில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை


புதியம்புத்தூரில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 July 2023 12:15 AM IST (Updated: 21 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புதியம்புத்தூரில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

புதியம்புத்தூரில் மதுகுடிப்பதை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கட்டிட தொழிலாளி

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் ராஜம்மாள்நகரை சேர்ந்த சின்னச்சாமி மகன் பேச்சிமுத்து (வயது 45). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முருகம்மாள். இவர்களுக்கு காளீஸ்வரி ஒன்ற ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகி நாகர்கோவிலில் கணவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். முருகம்மாள் தினமும் மகாத்மா காந்திதேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார். பேச்சமுத்துவும் வெளியூர்களுக்கு கட்டிட வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

மனைவியுடன் தகராறு

இந்த நிலையில் பேச்சிமுத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் இவர் தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். முருகம்மாள் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வரும் போது, மதுபோதையில் அவரிடம் தகராறு செய்துள்ளார். இதை அவரது மனைவி கண்டித்து வந்துள்ளார். ஆனால் வேலைக்கும் ெசல்லாமல், தினமும் அவர் மது குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

தூக்கு போட்டு சாவு

நேற்று முன்தினம் மாலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய மனைவியிடம் மதுபோதையில் பேச்சிமுத்து தகராறு செய்துள்ளார். இதை அவர் கண்டித்துள்ளார். இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். நேற்று காலையில் முருகம்மாள் வீட்டிலிருந்து வேலைக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த பேச்சிமுத்து தூக்கு மாட்டி தொங்கியுள்ளார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் தூக்கில் தொங்கி கொண்டிருந்த பேச்சிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீசார், ஓட்டப்பிடாரம் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story