ராமச்சந்திராபுரத்தில் ரூ.70 லட்சத்தில் அரசு திட்ட பணிகள்: மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு


ராமச்சந்திராபுரத்தில்  ரூ.70 லட்சத்தில் அரசு திட்ட பணிகள்:  மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:16:39+05:30)

ராமச்சந்திராபுரத்தில் ரூ.70 லட்சத்தில் அரசு திட்ட பணிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

ராமச்சந்திராபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்தில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை, பேவர் பிளாக் சாலை அமைப்பு பணி மற்றும் புதிய ரேஷன் கடை, கலையரங்கம் ஆகியவற்றுக்கான கட்டுமான பணி உள்ளிட்ட அரசு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மார்கண்டயன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் அன்புராஜன், ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் இமானுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story