சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
ஆறுமுகநேரி:
சாகுபுரம் கமலாவதி சீனியர் செக்கண்டரி ஸ்கூல் பள்ளியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் எஸ்.அனுராதா தலைமை தாங்கினார். பள்ளி மாணவ-மாணவியர்களின் மனநல ஆலோசகர் ஆர். கனேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் இ. ஸ்டீபன் பாலாசீர், தலைமை ஆசிரியை என். சுப்புரத்தினா, பள்ளி அட்மினிஸ்ட்ரேட்டர் வெ. மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு மலர்களால் அலங்கரித்து இருந்தனர். மேலும் நிகழ்ச்சியில் மாணவிகள் ஓணம் பண்டிகை பற்றி ேபசினர். கலை நிகழ்ச்சி நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஆசிரியைகள், மாணவிகள் கேரள பாரம்பரிய உடை அணிந்து கலந்து ெகாண்டனர்.
இதேபோன்று கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் ஓணம் பண்டிகை பள்ளி தலைவர் மற்றும் செயலாளர் ஆர்.ஏ. அய்யனார் ஏற்பாட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியைகள், மாணவிகள் கேரள பாரம்பரிய உடை அணிந்து, வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு, விளக்கேற்றி, கலை நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியை முத்துலட்சுமி தலைமையில் ஆசிரியைகள் செய்திருந்தனர்.