தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம்


தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில்  சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.

கந்தசஷ்டி விழா

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் கோவிலில் உள்ள சுப்பிரமணியசுவாமி சன்னிதானத்தில் கந்தசஷ்டி விழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடந்தது. விழா நாட்களில் சுவாமிக்கு கும்பஜெபம், கும்பாபிஷேகம், யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, ஆறுமுக அர்ச்சனை உள்ளிட்டவை நடந்தன. நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

திருக்கல்யாணம்

இதனை தொடர்ந்து நேற்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு காலை 7.15 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசுக்கு எழுந்தருளல், மாலை 4.25 மணிக்கு சுவாமி காட்சிக்கு எழுந்தருளல், மாலை 6.05 மணிக்கு தபசுக்காட்சி மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு சங்கரராமேசுவரர் ஆலய திருக்கல்யாண மண்டபத்தில் தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. 8 மணிக்கு திருமாங்கல்யம் பூட்டுதல், தீபாராதனை நடந்தது. 9 மணிக்கு சுப்பிரமணியசுவாமி, தெய்வானை அம்பாள் வீதிஉலா, பட்டண பிரவேசம் நடந்தது. விழாவை முன்னிட்டு 3 திருமண மண்டபங்களில் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி-அம்பாளை வழிபட்டனர்.


Next Story