சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா


சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 19 July 2023 4:44 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. தொழிலதிபர் மலையாண்டி பிரபு தலைமை தாங்கினார். மேல சாத்தான்குளம் சேகரம் வினோத் ஞானமணி ஜெபம் செய்தார். பள்ளி நிர்வாகி நோபிள் ராஜ் வரவேற்று பேசினார். பள்ளியில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி ஏற்பாடுகளை செய்திருந்தார். முடிவில், பள்ளியின் இயக்குனர் டினோ மெலினா ராஜாத்தி நன்றி கூறினார்.


Next Story