சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கு ஏலம்
சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கு ஏலம் போனது.
ஈரோடு
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 3 டன் பூக்கள் கொண்டு வந்திருந்தனர்.
இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.420-க்கும், முல்லை ரூ.200-க்கும், காக்கடா ரூ.435-க்கும், செண்டுமல்லி ரூ.74-க்கும், பட்டுப்பூ ரூ.125-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.110-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம் போனது.
Related Tags :
Next Story