சத்தி மார்க்கெட்டில்முல்லைப்பூ ரூ.800-க்கு விற்பனை


சத்தி மார்க்கெட்டில்முல்லைப்பூ ரூ.800-க்கு விற்பனை
x

சத்தி மார்க்கெட்டில் முல்லைப்பூ கிலோ ரூ.800-க்கு விற்பனையானது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 2 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.700-க்கும், முல்லை ரூ.800-க்கும், காக்கடா ரூ.400-க்கும், செண்டுமல்லி ரூ.50-க்கும், பட்டுப்பூ ரூ.69-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது.


Related Tags :
Next Story