சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.375 உயர்வு


சத்தி மார்க்கெட்டில்  கனகாம்பரம் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.375 உயர்வு
x

சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.375 உயர்ந்தது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 3.5 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள். இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.840-க்கும், முல்லை ரூ.520-க்கும், காக்கடா ரூ.300-க்கும், செண்டுமல்லி ரூ.35-க்கும், பட்டுப்பூ ரூ.18-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.675-க்கும், சம்பங்கி ரூ.15-க்கும், அரளி ரூ.280-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது.

நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் கனகாம்பரம் கிலோ ரூ.300-க்கு ஏலம் போனது. நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு 375 ரூபாய் அதிகரித்து ரூ.675-க்கு ஏலம் போனது.

கனகாம்பரம் வரத்து குறைந்ததாலும், அதன் தேவை அதிகரித்ததாலும் விலை உயர்ந்ததாக பூ மார்க்கெட் நிர்வாகிகள் கூறினார்கள்.


Next Story