சத்தியமங்கலத்தில், பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழமையான பாலம் இடித்து அகற்றம்


சத்தியமங்கலத்தில், பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட  பழமையான பாலம் இடித்து அகற்றம்
x

சத்தியமங்கலத்தில், பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழமையான பாலம் இடித்து அகற்றப்பட்டது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் ஒன்று உள்ளது. ஆங்கிேலயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 3 மாதமாக பாலம் இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. நேற்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் பாலத்தை இடித்து அகற்றும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பாலத்தின் முதல் கண் உள்ள பகுதி இடித்து அகற்றப்பட்டது. அப்போது பாலம் அப்படியே இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில் பொக்லைன் எந்திரமும் விழுந்து ஆற்றின் குறுக்கே நின்றது. இதில் பொக்லைன் எந்திரத்தை இயக்கிய டிரைவர் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார். தொடர்ச்சியாக 3 கண்கள் உள்ள பாலம் பகுதி தானாகவே இடிந்து விழுந்து ஆற்றில் விழுந்தது. மீதம் ஒரு கண் பாலம் பகுதி உள்ளது. பொக்லைன் எந்திரம் மூலம் பாலம் முழுவதும் இடித்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு புதிதாக மற்றொரு பாலம் கட்டும் பணி தொடங்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story