சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.2¼ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.2¼ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் போனது
ஈரோடு
சத்தியமங்கலத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைப்பழம் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 1,455 வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் கதலி வாழைப்பழம் கிலோ ஒன்று ரூ.64-க்கும், நேந்திரன் ரூ.47-க்கும் விற்பனை ஆனது. பூவன் (வாழைத்தார் ஒன்று) ரூ.790-க்கும், தேன்வாழை ரூ.760-க்கும், செவ்வாழை ரூ.860-க்கும், ரஸ்தாளி ரூ.550-க்கும், பச்சைநாடான் ரூ.510-க்கும், ரொபஸ்டா ரூ.480-க்கும், மொந்தன் ரூ.510-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வாழைத்தார்கள் மொத்தம் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 422-க்கு ஏலம் போனது.
Related Tags :
Next Story