சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.385-க்கு ஏலம்
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.385-க்கு ஏலம் போனது
ஈரோடு
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டுர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்ெகட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.385-க்கும், முல்லை ரூ.240-க்கும், காக்கடா ரூ.375-க்கும், செண்டுமல்லி ரூ.50-க்கும், பட்டுப்பூ ரூ.72-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.10-க்கும், அரளி 130-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.240-க்கு ஏலம் போனது.
Related Tags :
Next Story