பள்ளியில் சித்த மருத்துவ முகாம்


பள்ளியில்   சித்த மருத்துவ முகாம்
x

உடன்குடி தேரியூர் பள்ளியில் சித்த மருத்துவ முகாம் நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி ேதரியூர் ஸ்ரீராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனை சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம அரசு ஆரம்ப சுகாதார நிலையம்், காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து சித்த மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளித லைமை ஆசிரியர் சி.லிங்கேஸ்வரன் தலைமை தாங்கினார். மாணவர்களுக்கு கடலை மிட்டாய், எள்ளுருண்டை, பேரிச்சம் பழம் மற்றும் நில வேம்பு குடிநீர், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மருந்தாளுநர் முருகேசன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் மெய்ஞானபுரம் சித்தா மருந்தாளுனர் ஆறுமுகம், ஐ.சி.டி.சி கவுன்சிலர் சங்கர், பள்ளி ஆசிரியர்கள் ராஜ திலகவதி, ராமலிங்கம், சிவசுப்ரமணியன், அஜய் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் அய்யங்கண்ணுஅஜய் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story