தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில்பக்தர்கள் வசதிக்காகதெற்கு வாசலை திறக்க கோரிக்கை


தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில்பக்தர்கள் வசதிக்காகதெற்கு வாசலை திறக்க கோரிக்கை
x

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தெற்கு வாசலை திறக்க இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் இசக்கி முத்துக்குமார் சங்கர ராமேசுவரர் கோவில் நிர்வாக அலுவலரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில் பாகம்பிரியாள் அம்பாள் சன்னிதானத்தின் தென்புறத்தில் பெருமாள் கோவில் அருகே அம்மன் சன்னதி தெருவில் உள்ள வாசல் பல ஆண்டுகாலமாக பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டு இருந்தது.

கடந்த 1½ ஆண்டுகளாக பெருமாள் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், அந்த வாயில் கதவு அடைத்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த இடத்தில் கோவிலின் அருகே சுற்றுப்புறம் சுகாதார சீர்கேடு அடைவதோடு மது பிரியர்களின் அட்டகாசமும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே அம்மன் சன்னதி தென்புற வாயிலை திறந்து வைத்து, மெயின் ரோட்டில் இருந்து அந்த வழியாக பொதுமக்களும், பக்தர்களும் கோவிலுக்கு வர வழிவகை செய்து தருமாறும், பக்தர்களின் நலன் கருதி அந்த இடத்தை சுகாதாரமாக பேணி காக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறி உள்ளார்.


Next Story