சோமநாத சுவாமி கோவிலில் வருசாபிஷேகம்
ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் வருசாபிஷேகம் நடைபெற்றது.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் வருசாபிசேகம், லட்சார்ச்சனை மற்றும் புஷ்பாஞ்சலி பூஜைகள் நடைபெற்றன. முதல் நாளில் கணபதி ஹோமமும், சங்கல்பம் லட்சசார்ச்சனை துவக்கமும் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலையில் மகா கணபதி ஹோமம், விநாயகர் பூஜை, கும்ப பூஜை, வேத பாராயணம் நடைபெற்றது.தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் வருசாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனையும், பகல் 11 மணியளவில் லட்ச அர்ச்சனை பூர்த்தியும், இரவு புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story