ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது
ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது
ஸ்ரீமுஷ்ணம்
ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம்(ஜமாபந்தி) நேற்று காலை தொடங்கியது. இதற்கு வருவாய் தீர்வாய அலுவலரும், முத்திரைத்தாள் துணை கலெக்டருமான ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் சேகர் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் சீதாராமன் வரவேற்றார். இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பட்டா மாற்றம், வீட்டு மனைபட்டா, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்கினர்.
இதில் சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்வேல், துணை தாசில்தார் இளஞ்சூரியன், சசிகுமார், தனலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, நில அளவை வட்ட துணை ஆய்வாளர் ஜெயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜான் பாஸ்கோ, ரங்கசாமி, சரத்பாபு, செல்வகுமார் மற்றும் கிராம உதவியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜமாபந்தி தொடர்ந்து வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதை பொதுமக்கள் முறையாக பயன்படுத்தி பயன்பெறுமாறு தாசில்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.