ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் பக்தர்கள் பாட்டுப்பாடி கும்மி யடித்து போராட்டம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் பக்தர்கள் பாட்டுப்பாடி கும்மி யடித்து போராட்டம் நடத்தினர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் பக்தர்கள் பாட்டுப்பாடி கும்மி யடித்து போராட்டம் நடத்தினர்.
கும்மியடித்து போராட்டம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் திருமால் அடியார்கள் குழாம் அமைப்பினர் சுமார் 700 பேர் நேற்று வந்தனர். இவர்களை கோவில் ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் மூலவர் ரெங்கநாதரை தரிசித்த திருமால் அடியார்கள் குழாம் அமைப்பினர் தங்கக்கொடி மரம் அருகில் உள்ள கம்பத்தடி ஆஞ்சநேயரை, ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும். கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்திற்கு முன் இருந்தது போலவே மூலவர் ரெங்கநாதர் திருவடியை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கக்கொடி மரம் அருகிலும், கருடமண்டபத்திலும் ஜால்ரா அடித்து, பக்தி பாடல்பாடி, கும்மியடித்து, நடனமாடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரிந்துரை
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உங்களின் கோரிக்கைகளை இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு உடனடியாக பரிந்துரை செய்கின்றேன் என்றார்.
இதுகுறித்து திருமால் அடியார்கள் குழாம் அமைப்பின் தலைவர் சீனிவாசன் கூறுகையில், எங்களது இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள திருமால் அடியார்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற உள்ளோம். ஸ்ரீரங்கம் கோவில் நிலைமை குறித்தும், அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சுவரொட்டி ஒட்ட உள்ளோம் என்றார்.