ஈரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில்2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் குவிந்த மதுபிரியர்கள்


ஈரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில்2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் குவிந்த மதுபிரியர்கள்
x

ஈரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நேற்று மதுபிரியர்கள் குவிந்தனர்.

ஈரோடு

ஈரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நேற்று மதுபிரியர்கள் குவிந்தனர்.

ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லாது

இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதாகவும், செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்கு பின்னர் ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லாது என்றும் அதிரடி அறிவிப்பை நேற்று முன்தினம் வெளியிட்டது.

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வைத்திருப்போர் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்றும், ஒரு நபர் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டுமே வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்றும், நாட்டில் உள்ள வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.

திணறல்

இதற்கிடையில் தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்க எந்தவித தடையும் இல்லை என்று, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்தார். இதனால் வாரத்தின் கடைசி நாளான நேற்று அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளுடன் மது பிரியர்கள் குவிந்தனர்.

இதனால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் சில்லறை கொடுக்க முடியாமல் திணறினர். சில கடைகளில் டாஸ்மாக் ஊழியர்களுக்கும், மது பிரியர்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது


Next Story