கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில், வியாழக்கிழமைமுதலாமாண்டு மாணவர் சேர்க்கை


கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில், வியாழக்கிழமைமுதலாமாண்டு மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில், வியாழக்கிழமை முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடக்கிறது.

தூத்துக்குடி

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாமாண்டு வேளாண்மை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை இன்று (வெள்ளிக்கிழமை) கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி இன்று காலை 8 மணி முதல் 8.30 மணி வரை நெல்லை ரெயில் நிலையத்திலும், 8.45 மணி முதல் 9 மணி வரை புதிய பஸ் நிலையத்தின் முன்பும் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி பஸ் நிறுத்தி வைக்கப்படும். முதலாமாண்டு மாணவர்களும், பெற்றோரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் மா.தேரடிமணி தெரிவித்து உள்ளார்.


Next Story